2019- Tamil New Year- Vishu...
தமிழெனும் அமிழ்தப் புத்தாண்டு :சித்திரைப் பெண்ணாள் சிரித்து வருகின்றாள்.அத்தனை சீரும், சிறப்பும்குவிக்க வருகின்றாள்.எததுணை எழிலாய் வாழ்க்கையின் வாசலில் இன்பக் கோலம் வரைய வருகின்றாள்!அவள் வரும் இந்த இனிய நேரம் __ இத்தரை மேல் , இனிமேல் சொர்க்க சுகங்கள் தொடரட்டும்.முத்துக் கடல் பொங்கி நீரை வானுக்கு அனுப்பட்டும்.சுததமாய்க் கறுத்து மேகம், தருணத்தில் மழை பொழியட்டும்.மொத்தமாய் ஏரி, குளங்கள் நிரம்பி வழியட்டும்.புத்தம் புது பட்டாடையில் இயற்கை பொலியட்டும் நித்தமும் நிலங்கள் வளங்கள் வழங்கட்டும்.கத்தும் ஏழையின் வயிறுஉணவால் நிரம்பட்டும்,கொத்து மலர்க் கூட்டமாய் இளைய தலைமுறை புத்தொளி பரப்பட்டும்.சத்துணவாய் ஆன்மீகம் மனதுக்கு உரமாகட்டும்பக்தர்க்கு இரங்கி இறைவன் வரங்கள் தந்து வாழ்த்தட்டும்.இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வணக்கத்துடன் ஜானகி ரமணன் புனே
----------------------------------------------------------------------------------------------------------------------------------
முகாரியின் நித்திரை முடித்துவிகாரியின் விடியலில்விழித்தோம்.உலகின் முதல் மொழியானபொது மொழியானசெம்மொழி த் தமிழ்புத்தாண்டில் அடியெடுத்து வைத்தசித்திரை மகளே வருக.பண்பாடு போற்றும்பவித்ரம் பலவும் தருக.சித்திரைத் திருமகளே!எத்திசையும் வளம் பெருக்கிவற்றாத செல்வத்தோடுமன உறுதியை சேர்த்துமக்கள் மகிழ தொழில் வளம் பெருகிமகிழ்வான வாழ்வு சிறக்கஅருள் புரிவாய் திருவருளேஇத் தமிழ் புத்தாண்டில்.அறுமுகனின் அருளால்அரிதாகக் கிடைத்தஅருணகிரி குழுமஅன்பர்களுக்குஅனைத்து சௌபாக்கியங்களும்தந்து அருள் புரிவாயே.