2019- Mother's Day
அன்னையர் தின வாழ்த்ஆக்கள். எங்கள் உலகம் என்பது உன் ஆட்சி அல்லவா தாயே!கட்டவிழும் புலன்களைக் கட்டியது உன் அன்புக் கட்டளைகள்.உன் வரவுச் செலவுக் கணக்குகள் எங்களுக்கு வரவாகவே இருந்தது மாயம் .அப்புறம் தான் தெரிந்தது, அவையெல்லாம் உன் த்யாகம் .கடமைகள் பாலைவனம் இல்லை, சுகமான சோலைவனத்துக்குப் போட்டு வைத்த சுந்தரப் பாதைகள் என்பதை வரைந்து காட்டிய படம் நீ வாழ்ந்து காட்டிய பாடம் நீ.த்ருப்தியை விஞ்சிய செல்வம் இல்லை என்பது நீ ஆணித்தரமாய் சொன்ன உண்மை.உறவுகள் என்னும் பாலங்கள் தான் எங்கள் பலம் என்று உணர்த்தியவள்அப்படி அன்பின் எல்லையை விரிவு படுத்திக் கொண்டே வந்து நிறுத்திய இடம், இறையன்பை உணர்த்திய உன்னதம்.பிறகு எல்லாமே எளிதாகி விட்டது. எல்லாவற்றிலும் நம்பிக்கை பிறந்தது.வண்ணக் கோலத்தில் தொடங்கி, விண்முட்டும் சாதனைகள் வரை ரசிக்கும் இயல்பே, இயல்பானது.துன்பத்தடைகள் பலப்பல தோன்றினாலும்அவற்றைக் கடக்க உன் எளிய வழிகளும், விழியின் மொழியுமே போதுமானதாய் இருந்தது.உன் சொல்லின் கூர்மையெல்லாம் ரணசிகிச்சைசொல்லாமற் சொன்னதைப் புரிந்து கொள்ளும் பக்குவமும் நீ தந்தது.திரும்பிப் பாரக்கிறோம்.எங்களுக்காக எத்தனை மலரத் தோட்டங்கள்.எத்தனை இன்ப கீதங்கள்.எத்தனை முழு நிலாக் காலங்கள்.அத்தனைக்கும் நன்றி அம்மா...