தாய்மை என்னும் தூய அன்பு கங்கை.....கடவுள் தன் கருணையை அனைவரும் ப்ரத்யட்சமாக அனுபவிக்க அனுப்பி வைத்த புனிதம்.....த்யாகம் என்பது அவள் வாழ்க்கை முறை.....வழிகாட்டல் என்பது இயல்பான நடைமுறை...பக்தியென்னும் இசைக்கு குருவாய் அமைந்து, திருத்தித் திருத்தி மெருகேற்றும் மேன்மை இதயம் என்பது பூவாய் மலர்ந்து விடும் மென்மை.......விழி தந்து வண்ண உலகைப் பார்க்க வைத்து, மொழி தந்து, எங்கும் பாலம் அமைத்து, வழி தந்து நடக்க வைக்கும் இன்பம்......... நம் குறைகளே தெரியாத, தெரிந்தாலும் மன்னித்து விடுகின்ற நிறை குடம்........தள்ளாடும் தளர்நடை ரசித்தவள்...........முள்ளாடும் பாதைகளில் எச்சரிக்கையானவள்.நம் உள்ளாடும் நற்பண்புகளுக்கெல்லாம்ஊற்றுக் கண் ஆனவள்.........உறவின் இழைகளை பலப்படுத்தி உற்ற துணை ஆக்கியவள்..........இன்றைய நம் வாழ்வுக்கு, அன்றே வடிவம் தந்து வண்ணம் ஏற்றியவள்.எண்ணமெல்லாம் நீ தான் அம்மா........ஏற்றமெல்லாம் உன்னால் அம்மா.......
பொங்கி வழியும் உள்ளத்திற்கு வடிகால் அமைத்து உன்னைப் போற்றத் தாய் மொழியிலும் போதிய சொற்கள் இல்லையே தாயே......தாள் பணிகின்றோம்.......ஜானகி ரமணன் புனே