Kolam Notebook- Kolams/Artwork

JANANI RAGHAVAN's picture
About Kolam Notebook- Kolams/Artwork : PRINT

ஆண்டாள் திருவடி சரணம்.

விஷ்ணுவையே சித்தத்தில் நிறைத்து , வாழ்ந்திருந்த விஷ்ணு சித்தராம் பெரியாழ்வாருக்கு , ஒரு பரிசுத்த மலரைப் பரிசாகத் தர விழைந்தான் பரந்தாமன். அதற்கு ஆடிப் பூரம் என்ற திருநாளைத் தேர்ந்தெடுத்தான்.

அன்றுதான் பூதேவியின் அம்சமான   ஆண்டாள் நம் தவப்பயனாய்ப்  பூவுலகைத் தேடி வந்தாள்.

  திருவில்லிப்புத்துரைத் தேர்ந்தெடுத்தாள்..புனிதத் துளசிச் செடி அருகே குழந்தையாய்த் தவழ்ந்தாள்.  பெரியாழ்வாரை ஆனந்தக் கடலில் ஆழ்த்தி விட்டாள்

அவருடைய கண்ணுக்குக் கண்ணாய், உயிரின் உயிராய் , வளர்ந்தாள்.

திருப்பாவை என்னும் தமிழமுதம் தந்தாள். அதில் வேத, வேதாந்தத்தின் சாரம்  பிழிந்து தந்தாள்.

கண்ணனின் அற்புத தரிசனம் காட்டி,  நம்முளே பக்தி வெள்ளம் பாய்ந்திடச்,  செய்தாள்.              

மலர்ப் பாதை ஒன்றமைத்து மாதவனின் பாத மலருக்கு

நம்மை அழைத்துச் செல்லும் கோதையின் திருவடி சரணம்.