Abhirami Anthathi- Song-1- Udhikkindra Snkadhir...

JANANI RAGHAVAN's picture
About Abhirami Anthathi- Song-1- Udhikkindra Snkadhir... : PRINT

Abhirami Anthathi......

1: உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்னவிதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே: 

Meaning:உதய சூரியனின் செம்மையான கதிரைப் போலவும், உச்சித்திலகம் என்கிற செம்மலரைப் போலவும், போற்றப்படுகின்ற மாணிக்கத்தைப் போலவும், மாதுள மொட்டைப் போலவும், ஒத்து விளங்கும் மென்மையான மலரில் வீற்றிருக்கின்ற திருமகளும் துதிக்கக்கூடிய வடிவையுடையவள் என் அபிராமியாகும். அவள் கொடி மின்னலைப் போன்றும், மணம் மிகு குங்குமக் குழம்பு போன்றும் சிவந்த மேனியுடையவள். இனி அவளே எனக்குச் சிறந்த துணையாவாள்.