Abhirami Anthathi- Song-1- Arindhen Evarum...

JANANI RAGHAVAN's picture
About Abhirami Anthathi- Song-1- Arindhen Evarum... : PRINT

Abhirami Anthathi- 3-அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டுசெறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப்பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.அருட்செல்வத்தை அன்பர்களுக்கு வழங்கும் அபிராமியே! நின் பெருமையை உணர்த்தும் அடியார்களின் கூட்டுறவை நான் நாடியதில்லை. மனத்தாலும் அவர்களை எண்ணாத காரணத்தால் தீவினை மிக்க என் நெஞ்சானது நரகத்தில் வீழ்ந்து மனிதரையே நாடிக் கொண்டிருந்தது. இப்பொழுது நான் அறிந்து கொண்டேன். ஆதலினால் அத்தீயவழி மாக்களை விட்டுப் பிரிந்து வந்து விட்டேன். எவரும் அறியாத வேதப் பொருளை தெரிந்து கொண்டு உன் திருவடியிலேயே இரண்டறக் கலந்து விட்டேன். இனி நீயே எனக்குத் துணையாவாய்.