2022- Shivratri- Shivling with Trishul- Shankar Sankat Harna.....

JANANI RAGHAVAN's picture
About 2022- Shivratri- Shivling with Trishul- Shankar Sankat Harna..... : PRINT

பஞ்சாட்சரத்தின் மூலப் பொருள் ஆனவன்! பஞ்ச பூதங்களால் பாரெலாம் படைத்தவன்! பஞ்ச இந்திரியங்களின் உள் ஒளி ஆனவன்! பஞ்ச முகங்களிலிருந்து இசைக்கலை தந்தவன்! பஞ்ச மா பாதகரை பந்தாடி முடிப்பவன்! அஞ்சிடும் அடியாரை அணைத்துக் காப்பவன்! பஞ்சினும் மென்மையாம் கருணையின் உருவினன்! அஞ்சுக மொழியாளை அங்கத்தில் வைத்தவன்! பஞ்சம், பட்டனி, துயரங்கள் அஞ்சியே ஓடிட விரட்டிடும் அமலன்! கஞ்ச மலர் பூக்கும் பகலிலும், கொஞ்சும் குவளைகளின் இரவிலும், விஞ்சிடும் துணையாய் விடையேரி வருபவன்! செந்தழல் வண்ணனுக்குச் சொந்தமான இந்த இரவிலும், எந்த நிலையிலும் மங்கள சிவனைத் துதிப்போம்! துளிர்ப்போம்!தழைப்போம்! மலர்வோம்! கனிவோம்!ஓம் நம சிவாய! சிவாய நம ஓம்! வணக்கத்துடன் ஜானகி ரமணன் பூனே