2020- Pongal- Threshold- Maakkolam....
About 2020- Pongal- Threshold- Maakkolam.... : PRINT
இளங்காலை நேரத்தில் வளமான பொங்கல் வாழ்த்துக்கள். ' கடல் அளவாய்ப் பொங்கி ஆவியாய் வான் சேரட்டும் கார்மேகம் அடர்ந்து பொங்கி தருணமழை பொழியட்டும். நீர்நிலைகள் பொங்கி ஜீவாதாரம் தரட்டும் நிலம் பொங்கி நெல்லாய்க் கரும்பாய் , பூவாய்க் காயாய் கனியாய் குவிக்கட்டும். பால் பொங்கி ஏழைகள் வயிற்றில் பால் வார்க்கட்டும் அன்பு பொங்கி உறவுகள் பலப்படட்டும் அறிவு பொங்கி நாடு சீர்படட்டும் மனிதம் பொங்கி மாண்புகள் மலரட்டும். கலைகள் பொங்கி கவினுறு உலகம் படைக்கட்டும். ' ஆன்மீகம் பொங்கி வாழ்வை அர்த்தமுள்ளதாக்கட்டும். இறைவன் கருணை பொங்கி மனித குலத்தைக் காத்து நிற்கட்டும். வணக்கத்துடன், ஜானகி ரமணன் புனே