2019- Kaarthigai- Poojaoom Kolam...

JANANI RAGHAVAN's picture
About 2019- Kaarthigai- Poojaoom Kolam... : PRINT

 

திருக்கார்த்திகை.திருமகள் தேடி வரும் நேரம் திருவண்ணாமலையில் திக்கெட்டில் , சிவாலயங்களில்வீடுகளில் , வீதிகளில்,சிந்தையில்சிந்தனைகளில்ஒளிச்சுடரால் தோரணங்கள்பதினாறு பேற்றினை முழக்கும் பேரணிகள்.பேரிருளை விரட்டி அடிக்கும் போர்ப் படைகள்.இதயத்தில் இன்பமாம் முழுநிலவின் உதயம்.இறைவனின், இறைவியின்ஆனந்த நடனம்.அந்தக் கருணை விழிகள் திறந்ததால் ஒளியின் வெள்ளமோ!மனித உள்ளங்களிலும் அந்தப் பாசமாம், நேசமாம்ஒளிப் பூக்கள் மலருமோ!ஒற்றுமையாம் ஒளிப்பந்தலின் கீழ்ஒட்டுமொத்த மனித குலம் இளைப்பாறுமோ!உணர்வுகளும், உரைகளும் ஒன்றுக்கொன்றுவிளக்கேற்றிக் கொள்ளும் உன்னதமோ!வானத்துச் சுடர்கள் வையத்துக்கு வந்து விடும்வைபவமோ!கார்த்திகைப் பொன்னொளியேசரணம் சரணம்ஜானகி ரமணன் புனே