சித்திரைப் பெண்ணாள் பரிவுடன் சிரித்து வருகின்றாள்
முத்திரை பசும்பொன்னாய்
ஒளிமழை சிந்தி வருகின்றாள்.
பொங்கும் இன்பக் கடலாய் ஆடி வருகின்றாள்.
மங்கல முத்துச்சுடர்கள் ஏந்தி வருகின்றாள்.
இருளைக் கலக்கி விரட்டும் கதிராய் வருகின்றாள்.
மருள் தரும் நோயெனும் தீயை மாய்க்க வருகின்றாள்
இவள் கருணைக்கு முன் சிறுமைகள் நிற்பதில்லை.
ராம பாணத்தின் முன் அற்ப ஜந்துக்கள் நிலைப்பதில்லை. பக்தியை எதிர்த்து எதுவுமே என்றுமே வென்றதில்லை .
சக்திகள் தோற்றதாய்
சரித்திரமே இல்லை.
மற்றவருக்காய் மனம் உருகி வேண்டுவது வீண்போவதில்லை.
சுயநலங்கள் சுருண்டு போகட்டும்.
மாசுகள் தூசாய் அடித்துச் செல்லப்படட்டும்.
புத்துணர்வுப் பூக்கள் பாரெலாம் மலரட்டும்.
புதிதான உதயம் விடிவெள்ளியாய் புலரட்டும்.
கைகோர்த்து புவனம் அதை வரவேற்கட்டும்.
தமிழ் போலும் வளமான, இன்பமயமான ஆண்டு துவங்கட்டும்.
ஆண்டவன் அருள் அனைவரையும் காக்கட்டும்.
Mrs. Janaki Ramanan- Pune