Abhirami Anthathi- 4- Manidarum Devarum

JANANI RAGHAVAN's picture
About Abhirami Anthathi- 4- Manidarum Devarum : PRINT

மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னிகுனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்தபுனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.....

மனிதர், தேவர், பெரும் தவமுனிவர் முதலியோர் தலை வைத்து வணங்கும் அழகிய சிவந்த பாதங்களுடைய கோமளவல்லியே! தன்னுடைய நீண்ட சடாமுடியில் கொன்றையும், குளிர்ச்சி தரும் இளம் சந்திரனையும், அரவையும், கங்கையையும் கொண்டு விளங்குகின்ற புனிதரான சிவபெருமானும் நீயும் இடையறாது என் மனத்திலே ஆட்சியருள வேண்டும்.